குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி சப்பாத்தி.! எப்படி செய்வது என பாருங்க.!

குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி சப்பாத்தி.! எப்படி செய்வது என பாருங்க.!



how-to-make-delicious-chilli-chapati


இந்த சில்லி சப்பாத்தி காலை மற்றும் இரவு உணவுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

பொதுவாக சாதாரண சப்பாத்தியை  சாப்பிட்டு ஒருவருக்கு சலித்து விட்டால், ஏதாவது ஒன்றை வித்தியாசமான முறையில் செய்து சாப்பிட ஆசைப்படுவார்கள். அதற்காகவே இந்த சில்லி சப்பாத்தி இருக்கிறது. இது காலை மற்றும் இரவு உணவுக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதோடு, குழந்தைகள் இதனை விரும்பி உண்பார்கள்.

Chilly Chappathiதேவையான பொருட்கள்:

உப்பு - 1 சிட்டிகை

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

சீரகத்தூள் - 1 டீஸ்பூன்

மிளகாய் பொடி - சிறிதளவு

கரம் மசாலா - சிறிதளவு

தக்காளி -2

சப்பாத்தி -5

செய்முறை :

கோதுமை மாவை எடுத்துக் கொண்டு, அதில் சிறிதளவு உப்பு, தண்ணீர் ஆகிவற்றை சேர்த்து பிசைந்து, அதன் பிறகு சப்பாத்தி போட்டுக் கொள்ளவும். அந்த சப்பாத்தியை பொடி, பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். ஒருவேளை முதல் நாள் போட்ட சப்பாத்தி இருந்தால், அதனை பொடியாக நறுக்கிக் கொள்ளலாம்.

Chilly Chappathi

பின்னர் ஒரு கடாயை எடுத்துக் கொண்டு, அதில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடுகு, கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்றாக தாளித்து, அதில் தக்காளியை போட்டு வதக்கிக் கொள்ளலாம். அதன் பிறகு அதில் உப்பு, சீரகத்தூள்,, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கிய பின்னர் வெட்டி வைத்துள்ள சப்பாத்தியை அதில் போட்டு கிளறி விட்டால், சுவையான சில்லி சப்பாத்தி தயாராகிவிடும்.