99 சதவீதம் பேர் ஒருநாளைக்கு 6 முதல் 7 முறை ஏன் சிறுநீர் கழிக்கிறார்கள் என்று தெரியுமா..? அதன் முக்கிய காரணம் இதோ.!



how-many-times-you-can-pass-urine

மனிதனின் அன்றாட செயல்பாடுகளுள் ஒன்று சிறுநீர் கழிப்பது. ஆனால் நம்மில் பலர் சிறுநீர் கழிப்பது பற்றி அதிகம் யோசிக்கமாட்டோம். ஆனால் மனிதன் சிறுநீர் கழிப்பது என்பது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. சிறுநீரகங்களால் உற்பத்தி செய்யப்படும் சிறுநீரின் வழியே உடலில் இருந்து டாக்ஸின்களும், கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன.

ஒருவரது உடலில் இருந்து கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டால், உடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். எனவே ஒருவர் அன்றாடம் போதுமான அளவு சிறுநீரைக் கழிப்பது என்பது அவசியமாகும். ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழித்தால், உடல் ஆரோக்கியமாக உள்ளதாக எண்ணலாம் என நீங்கள் கேட்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான உடலமைப்பு இருக்கும். அதில் ஒரு நாளைக்கு சராசரியாக 6-7 முறை கழிக்கலாம். இல்லாவிட்டால் 4 முதல் 10 முறை வேண்டுமானாலும் கழிக்கலாம்.

health tips

கார்ன் சில்க்கில் இயற்கையாகவே நீர்ப்பெருக்கி பண்புகள் உள்ளன. இது சிறுநீரகங்களில் இருந்து சிறுநீர் உற்பத்தியைத் தூண்டிவிட்டு, சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கையை அதிகரிக்கும். அதற்கு சோளத்தில் உள்ள நாரை எடுத்து நீரில் கழுவி வெயிலில் உலர்த்த வேண்டும். பின் ஒரு கப் நீரை பாத்திரத்தில் ஊற்றி, அதில் 2 டீஸ்பூன் உலர்ந்த கார்ன் சில்க்கை போட்டு கொதிக்க வைத்து இறக்கி, 10 நிமிடம் மூடி வைத்து, பின் வடிகட்டி அந்நீரைக் குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை குடிக்க வேண்டும்.

இவ்வாறு நாள்தோறும் பருகிவந்தால் உங்களுக்கு இருக்கும் சிறுநீர் தொல்லை நீங்கிவிடும். நீங்களும் உங்கள் பொழுதை நலமுடன் கழிக்கலாம்.