தேன் மிட்டாய் பிரியரா நீங்கள்?.. வீட்டிலேயே செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!



Honey Mittay Preparation Tamil 

 

80ஸ் கிட்ஸ்-க்கு மிகவும் பிடித்த மிட்டாய்களில் ஒன்று தேன்மிட்டாய். தற்போது வரை இவை சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இன்று நாம் சுவைத்து சாப்பிடும் தேன் மிட்டாய் செய்வது குறித்து தெரிந்துகொள்ளலாம். 

தேன் மிட்டாய் செய்யத் தேவையான பொருட்கள்:

உளுந்து - 2 கரண்டி,
அரிசி - ஒரு கரண்டி, 
சர்க்கரை - 2 கிண்ணம்,
சோடா உப்பு - கால் கரண்டி,
கலர் பவுடர் - கால் கரண்டி,
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: 

முதலில் எடுத்துக்கொண்ட உளுந்து மற்றும் அரிசி ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து, நீர் ஊற்றி சுமார் 2 மணிநேரம் நன்கு ஊறவைக்க வேண்டும். 
பின் இதனை மிக்சியில் சேர்த்து பேஸ்ட் பதம் வரும் வரை அரைக்க வேண்டும். இதனுடன் பேக்கிங் சோடா, புட் கலர் போன்றவற்றை சேர்த்து நன்கு கிளற வேண்டும். 

இக்கலவை தயாரானதும் அடுப்பில் வாணெலியை வைத்து, எண்ணெய் ஊற்றி தயார் செய்யப்பட்ட மாவை ஸ்பூன் கொண்டு சிறிது சிறிதாக சேர்த்து பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

பொறித்து எடுக்கப்பட்ட உருண்டைகளை, சர்க்கரை சேர்த்து பாகு தயாரித்து அதனுடன் சேர்த்து ஊறவைத்து எடுத்தால் சுவையான தேன் மிட்டாய் தயார்.