தொடர்ந்து மூன்று நாட்கள் இதை கொண்டு பல் தேய்த்தால் போதும்..! எப்பேர்ப்பட்ட மஞ்சள் கரையும் நீங்கிவிடும்..!

Home remedies for whitening teeth in tamil


Home remedies for whitening teeth in tamil

இன்றில் பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஓன்று மஞ்சள்கரை படிந்த பற்கள். புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற பல காரணங்களால் பற்கள் மஞ்சள் நிறமாக மாறுகிறது. இதுமட்டும் இல்லமால், அசிடிட்டி அதாவது நெஞ்செரிஜல் பிரச்சனை இருப்பவர்களுக்கும் பற்கள் மஞ்சள் நிறமாக மாறி, வாய் துர்நாற்றம் அடிக்க வாய்ப்புள்ளது.

இதனை சரி செய்வதற்காக பல்வேறு விலை உயர்ந்த பேஸ்டுகளை வாங்கி பயன்படுத்துவதற்கு முன் வீட்டில் கிடைக்கும் சாதாரண பொருட்களை கொண்டே சரிசெய்யலாம்.

அனைவர் வீட்டிலும் சாதாரணமாக கிடைக்கும் பொருட்களில் ஓன்று சீரகம். சீரகம் செரிமான பிரச்சனைக்கு மட்டும் இல்லாமல் நல்ல ஒரு ஆன்டிபேக்டிரியாளாக செயல்படுகிறது. இந்த சீரகத்தை பற்களில் தேய்க்கும் போது மஞ்சள் கரை நீங்கி, வாய் துர்நாற்றம் போவதற்கு உதவுகிறது.

இதை எப்படி பயன்படுத்துவது?
சீரகத்தை மிக்சியில் போட்டு நன்கு பொடி செய்துகொள்ளவும், அரை ட்யூஸ்பூன் அளவு சீரக போட்டியில் சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும், இதனுடன் 5 அல்லது 6 சொட்டு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். பின்னர் இதனுடன் நன்கு பழுத்த தக்காளியின் சாறு சிறிதளவு சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்து பேஸ்ட் போல் மாற்றவும்.

பின்னர் இந்த பேஸ்டை விரல் அல்லது பிரஷ் கோடு பற்களில் நன்கு தேய்க்கவேண்டும். தினமும் இரண்டு முறை மூன்று நாட்களுக்கு இந்த பேஸ்டை கொண்டு பல் துலக்குவதன் மூலம் பற்களில் உள்ள மஞ்சள் கரை நீங்கி வெண்மையாக மாறும், மேலும், வாய் துர்நாற்றமும் குறையும்.