மக்களே உஷார்! Heat stroke யார் யாருக்கு வரும் தெரியுமா? இதிலிருந்து தப்பிக்க இதுதான் வழி!!!



heat-stroke-safety-tips-summer-india

இந்தியாவில் கோடைகால வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடும் வெயில் காரணமாக மக்கள் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக வெக்கை வாதம் சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். முன்னெச்சரிக்கை எடுத்தால் இதை தவிர்க்கலாம் என்பதும் குறிப்பிடப்படுகிறது.

யாருக்கு அதிக அபாயம்?

தகவலின்படி, அதிக வெப்பத்தில் உடல் சூடு கட்டுப்பாட்டை இழக்கும் போது Heat stroke ஏற்படுகிறது. இளம் வயதினருக்கு வியர்வை மூலம் உடல் சூடு குறையும் திறன் அதிகமாக இருக்கும். ஆனால் முதியவர்களுக்கு அது குறைவாக இருப்பதால், அவர்கள் விரைவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் மயக்கம், பலவீனம், கடுமையான நிலையில் பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

இதையும் படிங்க: பெற்றோர்களே எச்சரிக்கை.. குழந்தைகளுக்கு அடிக்கடி வயிறு வலிக்கிறதா?.. இந்த அறிகுறிகளை தவறவிடாதீங்க.!

வெயிலில் இருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி?

வெயில் தாக்கத்தை குறைக்க சில எளிய வழிமுறைகள் உதவும். தினமும் காலை, மாலை குளிப்பது நல்லது. அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், மோர், பழச்சாறு போன்ற நீர்ச்சத்து உணவுகள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். வெளிர் நிற, தளர்வான ஆடைகள் அணிவது சிறந்தது. கடும் வெயில் நேரத்தில் வெளியே செல்லாமல் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

வெளியே செல்லும் போது கவனிக்க வேண்டியது

தவிர்க்க முடியாத சூழலில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், தண்ணீர் பாட்டில், ஓஆர்எஸ் கரைசல், குடை, கைக்குட்டை போன்றவை உடன் வைத்திருக்க வேண்டும். சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது பயனுள்ளதாகும். முடிந்தவரை தனியாக செல்லாமல், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது பாதுகாப்பாகும்.

வெயிலில் ஒருவர் மயங்கினால், உடனடியாக நிழலான இடத்துக்கு மாற்ற வேண்டும். அதன்பின் முகத்தில் தண்ணீர் தெளித்து, குளிர்ந்த துணியால் உடலை துடைத்து சூட்டை குறைக்க வேண்டும். நிலை மோசமாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லுவது அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.