வயிற்றில் உள்ள நச்சுக்களை உடனடியாக வெளியேற்றும் சுண்டைக்காய் துவையல்.! எப்படி செய்யலாம்.!?

வயிற்றில் உள்ள நச்சுக்களை உடனடியாக வெளியேற்றும் சுண்டைக்காய் துவையல்.! எப்படி செய்யலாம்.!?



Health Benefits of eating sundakkai chutney

பொதுவாக காய்கறிகளில் அதிகமாக மருத்துவ குணம் கொண்ட காய்கறியாக சுண்டைக்காய் இருந்து வருகிறது. மிகவும் சிறிய காயாக இருந்தாலும், இதில் ஊட்டச்சத்து மிகப்பெரும் அளவு உள்ளது என்பதால் இதை ஊட்டச்சத்தின் சேமிப்பு கிடங்கு என்று அழைக்கின்றனர். மிகவும் கசப்பான சுவை கொண்ட இந்த சுண்டைக்காயில் பல நோய்களை குணப்படுத்தும் மருத்துவ பண்புகள் நிறைந்திருந்தாலும் வயிற்றில் உள்ள நச்சுக்களை நீக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. எனவே இந்த சுண்டைக்காயை துவையல் செய்து எப்படி சாப்பிடலாம் என்பதை பற்றி இப்படி பார்க்கலாம்?

சுண்டைக்காய்

தேவையான பொருட்கள்

பிஞ்சு சுண்டைக்காய் - 1 கப்
எண்ணெய் - தேவையான அளவு தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன் உளுந்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் வரமிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - 1/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தேங்காய் துருவல், உளுத்தம் பருப்பு, வர மிளகாய், பெருங்காயம் போன்றவற்றை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் தனியாக எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும். அதே கடையில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சுண்டைக்காயை நன்றாக வதக்கி தனியாக வைத்து கொள்ள வேண்டும். பின்பு இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து அதில் வதக்கி வைத்த சுண்டைக்காய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்தால் சுவையான சுண்டைக்காய் துவையல் தயார்.

சுண்டைக்காய்

தினமும் காலையில் இட்லி மற்றும் தோசைக்கு இந்த சுண்டைக்காய் துவையல் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள நச்சுகள் நீங்கி, மலச்சிக்கல் செரிமான பிரச்சனை மற்றும் குடற்புழுக்கள் போன்ற தொல்லைகள் நீங்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.