சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும் நாவல் பழத்தின் அற்புத நன்மைகள்!



Health benefits naval pazham

நாவல் பழம் இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் அதிகம் விளைவிக்கப்படும் எளிய பழமாகும். இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான பழமாகும். எனவே நாவல் பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

Naval pazham

நாவல் பழத்தில் ஜம்போலைன் என்ற திரவம் உள்ளது. இது இன்சுலின் சுரப்பை அதிகரித்து, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு நாவல் பழம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

நாவல் பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. குறிப்பாக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

Naval pazham

நாவல் பழத்தில் உள்ள வைட்டமின் சி, சிற்றிக் அமிலம் போன்ற பொருட்கள் சிறுநீரக கற்களை கரைக்கும் பண்புகளை கொண்டுள்ளன. மேலும் சருமத்தை சுத்தப்படுத்தி அழகாக செய்ய உதவுகிறது.

அதேபோல் நாவல் பழத்தில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வைக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்தாகும். இது கண் பார்வை மங்குதல் மற்றும் மாலைக்கண் நோய் போன்ற பிரச்சினைகளை தடுக்க உதவுகிறது. அதேபோல் நாவல் பழத்தில் உள்ள நார்சத்து மலச்சிக்கலை போக்க உதவுகிறது.