லைப் ஸ்டைல் வீடியோ

எப்படி தாலி கட்டுவது என தெரியாமல் தடுமாறும் மணமகன்..! கடைசியில் மணமகளே செய்த காரியம்.! வைரல் வீடியோ.

Summary:

Groom struggle to knot chain on bride neck video goes viral

இனையத்தில் வெளியாகும் சில காட்சிகள் மின்னல் வேகத்தில் வைரலாகிவிடுகிறது. அந்த வகையில், தாலி கட்ட தெரியாமல் தடுமாறும் மணமகனின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது.

எத்தனையோ பேர் தங்கள் திருமணத்திற்கு முன் மணமகளின் கழுத்தில் எப்படி தாலி கட்டவேண்டும் என செய்முறை பயிற்சியெல்லாம் எடுத்திருப்பார்கள். ஆனால், பாவம் இந்த மாப்பிளை அதுபோன்ற பயிற்சி ஏதும் எடுக்கவில்லை போல. இந்த வீடியோவில் மணமகனின் கையில் தாலி கட்ட சொல்லி தாலியை எடுத்து கொடுக்கின்றார்.

தாலியை கையில் பிடித்த மணமகன் எப்படி கட்டுவது என்று தெரியாமல் மணமகளை ஒருவழிபடுத்துகிறார். அருகில் இருப்பவர்கள் அப்படி கட்டு, இப்படி கட்டு என அறிவுரை வழங்க, பெருத்திருந்த மணமகள் இப்படி காட்டுங்கள் என மாப்பிளைக்கு ஐடியா கொடுக்கிறார். கடைசியில் மணமகள் கொடுத்த ஐடியாவும் வேலைக்கு ஆகவில்லை.

கடைசியாக சிரமப்பட்டு மாப்பிளை எப்படியோ தாலி கட்டி முடிக்கிறார். இவன் கண்டிப்பா 90's கிட்ஸா தான் இருப்பான் என்ற தலைப்புடன் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement