லைப் ஸ்டைல் சமூகம்

பெற்ற குழந்தையை இப்படி செய்ய இவர்களுக்கு எப்படி மனம் வருகிறது! சென்னையில் தொடரும் அவலங்கள்

Summary:

girl left the born baby in hospital bathroom

சென்னையில் திருமணம் செய்து கொள்ளாமல் கர்ப்பமாகி தனியார் மருத்துவமனையில் பெற்றெடுத்த குழந்தையை கழிவறையில் தாய் விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை சூளைமேடு பகுதியில் வக்கீலாக இருந்து வரும் இளம்பெண் ஒருவர் திருமணம் ஆகாமலே ஒரு நபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமாகியுள்ளார். இதை வெளியில் சொல்லாமல் மறைத்து வந்த அந்த பெண்ணிற்கு திடீரென வயிற்று வலி வந்துள்ளது. எனவே தனக்கு நெருக்கமானவர்களை அழைத்துக்கொண்டு அந்த பெண் சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் திடீரென அதிகாலை நேரத்தில் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறி கிளம்பி விட்டார். அந்தப் பெண் கிளம்பியதும் அவர் தங்கியிருந்த அறையை மருத்துவமனை ஊழியர்கள் சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளனர். அப்போது அந்த அறையில் உள்ள கழிவறையில் ஒரு குழந்தை கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து இதுகுறித்து சூளைமேடு காவல் நிலையத்திற்கு மருத்துவமனை சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்தப் பெண்ணை அடையாளம் கண்டு கொண்டனர். பின்பு அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர்.

அப்போது அந்தப் பெண்ணின் பெயர் திவ்யா என்பதும் அவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.  இவர் திருமணம் ஆகாமலே கர்ப்பமாகி குழந்தையை பெற்றதால் அங்கேயே விட்டு விட்டுச் சென்றதாக கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு மன்னித்து விடுமாறும் காவல்துறையினரிடம் கெஞ்சியுள்ளார். மேலும் குழந்தையை தாமே வளர்ப்பதாகவும் உறுதி அளித்து குழந்தையை பெற்றுக் கொண்டார்.


Advertisement