லைப் ஸ்டைல் சமூகம்

திருமணமான 35 நாட்களில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த பெண்; அதிர்ச்சியில் பெண்ணின் தந்தை எடுத்த விபரீத முடிவு!

Summary:

திண்டுக்கல்லை அடுத்த ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள குளத்துப்பட்டியை விவசாயி முனியப்பன் (58). இவரது மகளுக்கும் கன்னிவாடி அருகே உள்ள தருமத்துப்பட்டியை சேர்ந்த பெரியமுத்து (வயது 28) இவருக்கும் கடந்த மாதம் 1–ந்தேதி திருமணம் நடந்துள்ளது.

பெரியமுத்து சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு பூக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். திருமணமான 3 நாட்களிலேயே, பெரியமுத்து வேலைக்காக சென்னை சென்று விட்டார். நேற்று முன்தினம் மாலையில் அவர் சொந்த ஊருக்கு வந்தார்.

இரவில், திடீரென அந்த பெண் தனக்கு வயிறு வலிப்பதாக கணவரிடம் கூறியதையடுத்து சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பெரியமுத்து அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்தபோது, அணைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பெண் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறிதுநேரத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

திருமணமான 35 நாட்களில் குழந்தை பிறந்த தகவலை கேட்ட பெரியமுத்து அதிர்ச்சி அடைந்தார். திருமணத்துக்கு முன்பே அந்த பெண்ணுக்கு, வேறு ஒரு நபருடன் ஏற்பட்ட தொடர்பில் குழந்தை பிறந்திருப்பது தெரியவந்தது. இதனால் அந்த பெண்ணுடன், தன்னால் சேர்ந்து வாழ முடியாது என்று தனது மாமனாரிடம் பெரியமுத்து தெரிவித்ததாக தெரிகிறது.

hanging க்கான பட முடிவு

மேலும் திருமணமான 35 நாட்களில் தனது மகளுக்கு குழந்தை பிறந்ததால் அந்த பெண்ணின் தந்தை முனியப்பன் அவமானம் அடைந்தார். இதனால் மனம் உடைந்த அவர், நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 


Advertisement