மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்! எதிர்பார்பில் ரசிகர்கள்....
50 வயசானா இந்த பிரச்சனைலாம் வருமா?.! இதை தடுக்க அருமையான ஹெல்த்தி டிப்ஸ்..! தெரிஞ்சிக்கோங்க.!!
வயதான காலத்தில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரித்து, ஊட்டச்சத்துக்களை வழங்கும் உணவுகள் குறித்து விளக்குகிறது என்று செய்திக்குறிப்பு.
நமக்கு வயதாக தொடங்கும் போது நம்முடைய உறுப்புகளின் இயக்கம் மற்றும் வேகம் குறைந்து விடுகிறது. இதனால் நம்மால் எந்த வேலையும் செய்ய இயலாது என்ற ஒரு எண்ணம் அனைவருக்கும் வந்துவிடுகிறது. ஆனால் உடலின் வேகத்தையும், ஆரோக்கியத்தையும் நம்மால் மாற்றியமைக்க இயலும்.
தினசரி உணவு மற்றும் ஆரோக்கியமான முறையில் உணவுகளை உட்கொள்வதால் வயதானாலும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்க உதவுகிறது. உடலுக்கு தேவையான ஆற்றலும் கிடைக்கிறது. குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் தனது உடல்நலனில் கவனம் செலுத்தி ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதன் மூலம் திடகாத்திரமாக இருக்க இயலும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஊட்டச்சத்துக்களை வழங்கும் உணவுகள் :
தானியங்கள் :
தானியங்களில் மாவுச்சத்து அதிகமாக நிறைந்திருப்பதால், உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுக்கிறது. மேலும் இதயத்திற்கு போதுமான பலத்தை கொடுத்து செரிமானத்திலும் முக்கிய பங்காற்றுகிறது.
பெர்ரி :
பெர்ரி பழங்களில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது இதய நலனை மேம்படுத்த உதவுவதுடன், சர்க்கரை ஆசையை போக்கக்கூடிய சிறந்த உணவாக இருக்கிறது.
டார்க் சாக்லேட் :
ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ள டாக்ஸ் சாக்லேட்டை உண்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இயலும். இதய நோய் வராமலும் பாதுகாக்கலாம். இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி, மினரல்களை அதிகமாக்குகிறது. இதனால் உடல் நலனை மேம்படுத்த இயலும்.
காய்கறி மற்றும் பச்சை கீரை :
பிரக்கொலி, பசலை கீரை மற்றும் முட்டைக்கோஸ் போன்ற கீரை வகைகளில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது தசைகளின் இயக்கத்தை ஊக்குவிக்க உதவுகிறது.
நட்ஸ் :
50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து வயதினரும் உண்பதற்கான சிறந்த உணவு நட்ஸ்தான். இது உடலுக்கு தேவையான எனர்ஜியை வழங்கி, அறிவாற்றல் மற்றும் உடல் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது. வால்நட் போன்ற நட்ஸ்கள் இதயநோய் வராமல் பாதுகாக்கிறது.
தக்காளி :
தக்காளியில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் சர்ம செல்களை பாதுகாத்து, உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுகிறது. மேலும் அலர்ஜியை குறைக்கும் தன்மையும் தக்காளிக்கு அதிகமுண்டு.
தண்ணீர் :
உணவு வகைகளில் தண்ணீர் வராவிட்டாலும் கண்டிப்பாக தினமும் தண்ணீர் குடிப்பதால் பலவித நன்மைகள் ஏற்படுகிறது. பொதுவாக செரிமானம் மற்றும் நீரேற்றம் போன்ற பல இயக்கங்களுக்கு துணைபுரிந்து தண்ணீர் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
ஆலிவ் எண்ணெய் :
ஆலிவ் எண்ணெயில் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால் இதயநோய் வராமல் தடுக்கிறது. மேலும் இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் ஆலிவ் எண்ணெயில் காணப்படுகிறது.
மீன் :
50 வயதை கடந்தவர்கள் மத்தி மற்றும் சால்மன் போன்ற நல்ல கொழுப்பு மீன்களை உண்ண வேண்டும். இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளதால், உடலுக்கு தேவையான புரதச்சத்தை அளிக்கிறது.