நாம் பயன்படுத்தும் உள்ளாடைகளுக்கு காலாவதி தேதி உண்டு என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

நாம் பயன்படுத்தும் உள்ளாடைகளுக்கு காலாவதி தேதி உண்டு என்பது எத்தனை பேருக்கு தெரியும்?


expiry-date-for-inner-wears-in-tamil

பொதுவாக நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களுக்கு காலாவதி தேதி என்ற ஓன்று உள்ளது. உணவு மற்றும் மருந்து பொருட்கள் மட்டும் இல்லாமல், நான் அன்றாடம் பயன்படுத்தும் துணிகள், உள்ளாடைகள் போன்றவற்றிற்கும் காலாவதி தேதி உள்ளது.

உள்ளாடைகள் மட்டுமல்ல, நாம் தினமும் பயன்படுத்தும் குளியல் டவல், டூத் பிரஷ், குழந்தைகளின் பீடிங் நிப்பிள், தலையணை, மெத்தை விரிப்பு என அனைத்திற்கும் ஒரு காலக்கெடு உண்டு.

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, நாம் தினமும் பயன்படுத்தும் உள்ளாடைகளை வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் மாற்றியே ஆகவேண்டும். இல்லையெனில், பாக்டீரியா தொற்று, எரிச்சல், அரிப்பு, புண் போன்றவை அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட அதிக வாய்ப்பு உள்ளது.

உள்ளாடைகளை மாற்றாமல் நீண்ட வருடமாக பயன்படுத்திவந்தால் சிறுநீர் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு ஒருமுறையாவது உங்கள் பழைய உள்ளாடைகளை தூக்கி வீசிவிட்டு புது உள்ளாடைகளை வாங்கி பயன்படுத்துங்கள். அதையும் தினமும் துவைத்து பயன்பத்தவேண்டியது மிக முக்கியமானது.