லைப் ஸ்டைல்

கொரோனாவை மறந்து உங்களை அறியாமளையே சிரிக்க வைக்கும் குட்டி யானை செய்த தரமான சம்பவம்.! வைரல் வீடியோ.!

Summary:

Elephant calf playing like child video goes viral

குழந்தை பருவம் என்றாலே மனிதன் தொடங்கி, பறவைகள், விலங்குகள் என அணைத்து உயிரினங்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் ஓன்று. கவலை, பயம், பொறுப்பு இப்படி எதுவும் இல்லாமல் வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக வாழக்கூடிய வாய்ப்பு குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு.

அந்த வகையில், குட்டி யானை ஓன்று சிறு குழந்தைபோல் சறுக்கிவிளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை ரசிக்கவைத்துள்ளது. காட்டுக்குள் நடந்து சென்றுகொண்டிருக்கும் குட்டி யானை ஓன்று திடீரென ஒரு சருக்கலான வழிப்பாதையை பார்த்ததும் குஷி ஆகிறது.

உடனே தனது முன்னங்கால்கள் இரண்டையும் மடக்கி குழந்தை போல் அந்த சறுக்கலில் சறுக்கி செல்கிறது. சிறு பிள்ளைகள் எந்த உயிரினமாக இருந்தாலும் அவை சிறுபிள்ளைதான் என்ற தலைப்புடன் உலா வரும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement