வெயில் காலத்தில் டிராகன் பழத்தை சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா.?!

வெயில் காலத்தில் டிராகன் பழத்தை சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா.?!



dragon-fruit-benefits-in-summer-season

டிராகன் பழத்தின் சுவை சிலருக்கு பிடித்ததாகவும், பலருக்கு பிடிக்காததாகவும் இருக்கும். இதன் விலை சற்று அதிகமாக இருப்பதால் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது. இந்த பழம் சந்தைகளில் தான் அதிகம் இருக்கும். இந்தக் கனியில் பல அற்புத நன்மைகள் இருக்கின்றன. அதிலும் கோடை காலத்தில் டிராகன் பழத்தை சாப்பிடும் போது மேலும் பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது. டிராகன் பழம் உள்ளே வெள்ளை நிறத்திலும், வெளியே சிவப்பு நிறத்திலும் இருக்கும்.

கோடை காலத்தில் பொதுவாகவே பழ வகைகளை நிறைய எடுத்துக் கொள்வது நல்லது. ஏனென்றால்  உடல் வெப்பம் அதிகரிக்க தண்ணீர் பற்றாக்குறை உடலில் ஏற்படும். அப்பொழுது நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க பழங்களை சாப்பிடுவது நல்லது. இதில் டிராகன் பழத்தைக் கோடையில் சாப்பிடுவதன் மூலம் எவ்வாறு நன்மை தருகிறது என்பதை பார்ப்போம்.

Dragon fruitடிராகன் பழத்தில் வைட்டமின் பி, இரும்பு சத்து மற்றும் ஃபோலேட் உள்ளது. இதை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். இந்த பழத்தில் நார்ச்சத்து மெக்னீசியம் இருப்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடும் போது சர்க்கரை அளவை அதிகரிக்காது மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் நன்மை தரும். இந்த பழத்தின் சாறை எடுத்த தினமும் குடித்து வந்தால் சருமம் அழகாகும். கூந்தலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். ராஜன் பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடென்ட் இருப்பதால் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

Dragon fruitடிராகன் பழத்தில் நார்ச்சத்து இருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கும், செரிமானத்திற்கும் நல்லது. மேலும் இந்த பழத்தில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதய நோய் வருவதைக் குறைகிறது.

டிராகன் பழத்தை கோடையில் சாப்பிடும் போது பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. இதை சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோயைத் தடுக்க உதவுகிறது. எனவே கோடை காலத்தில் கண்டிப்பாக டிராகன் பழம் கிடைக்கும் போதெல்லாம் விலையை பார்க்காமல் வாங்கி சாப்பிடுங்கள்.