குழந்தைகளிடம் நீங்க இப்படி எல்லாம் பேசுவீங்களா.?! அப்ப இதை தெரிஞ்சிக்கோங்க.!

குழந்தைகளிடம் நீங்க இப்படி எல்லாம் பேசுவீங்களா.?! அப்ப இதை தெரிஞ்சிக்கோங்க.!



dont-use-this-word-no-and-cant-for-childrens

குழந்தைகளிடம் எப்போதும் பாசிட்டிவ்வாக பேச வேண்டும். பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள நெருக்கம் அதிகரிக்க எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு உங்கள் குழந்தை ஏதாவது கேட்டால் இல்லை, வேண்டாம் என்ற நெகட்டிவ் வார்த்தையை ஒரு போதும் சொல்லவேக்கூடாது. அப்படி சொன்னால் குழந்தைகளுக்கு உங்கள் மீது கோபம், வெறுப்பு மற்றும் ஏமாற்றம் உண்டாகும்.

இதற்கு பதிலாக குழந்தைகளுக்கு எப்படி சொன்னால் புரியும் என்று முடிவு செய்து அதற்கு ஏற்றார் போல் சமாதானம் செய்வது நல்லது. வீட்டில் ஏதேனும் முடிவெடுக்கும் சமயத்தில், அதில் உங்கள் குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதற்கான ஆப்ஷன்களையும் கொடுத்து முடிவெடுக்க செய்யுங்கள். அப்போதுதான் நம் பெற்றோர்கள் நமக்கும் ஒரு வாய்ப்பை கொடுக்கிறார்கள் என்ற ஒரு நம்பிக்கை மனதிற்குள் வரும். இந்த நம்பிக்கை அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். 

Childrens

உங்கள் குழந்தைகள் ஏதேனும் ஒரு பொருளை விருப்பப்பட்டு கேட்டால் அதை உடனே வாங்கி கொடுக்காதீர்கள். கொஞ்ச காலம் காத்திருக்க வையுங்கள். பின்னர் அது தேவையான பொருளா என்று குழந்தைகளுக்கு புரிய வையுங்கள். சில குழந்தைகள் அடம்பிடிப்பார்கள். அப்போது அவர்களின் கவனத்தை வேறு பக்கம் திசைத் திருப்பி எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள்.

பொதுவாக குழந்தைகள் ஏதேனும் கேட்டு வாங்கி தரவில்லை என்றால் அவர்கள் மனதளவில் மிகவும் கவலைப்படுவார்கள். அந்த சமயத்தில் குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இதற்கு இதுதான் காரணம் என்று விளக்கம் கொடுங்கள். இப்படி செய்தால் குழந்தைகளுக்கு உங்கள் மீதான நெருக்கம் அதிகரிக்கும். 

Childrens

குழந்தைகளின் படைப்பாற்றல் திறனை வளர்க்க, அவர்கள் மனதில் உள்ள ஆலோசனைகளை பற்றி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதனை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களிடம் பேசுங்கள். இதன் மூலம் யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாக முடிவெடுக்கும் திறன் அவர்களுக்குள் உருவாகும். 

உங்கள் குழந்தைகளின் கற்பனை திறனை கேட்டு சந்தோஷப்படுங்கள். குழந்தைகளிடம் அவர்களது வேலையில் கவனத்தைச் செலுத்தச் சொல்லும்போது கோபமாகவோ, எரிச்சலாகவோ செல்லக்கூடாது. அவர்களை பொறுமையைக் கையாள வேண்டும். எனவே, குழந்தைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, தங்களது எதிர்கால இலக்குகளை அடைய உறுதுணையாக இருங்கள்.