லைப் ஸ்டைல் வீடியோ Corono+

வீடியோ: கொரோனா பாடல் பாடிய நாய்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி.!

Summary:

Dog singing corono awareness song video goes viral

பிரபல இசை அமைப்பாளரின் வளர்ப்பு நாய் ஓன்று அவர் இசை அமைக்க, அந்த இசைக்கு ஏற்றவாறு கொரோனா பாடல் ஒன்றை பாடியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், கொரோனா சம்மந்தமான பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

அந்த வகையில், இந்த நாய் பாடும் பாடலும் வைரல் லிஸ்டில் இணைந்துள்ளது. பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் என்பவர் இசை அமைக்க, அந்த நாய் அதற்கு ஏற்றார் போல் தலையை அசைத்தும், கத்தியும் பாடல் பாடியுள்ளது. கொரோனா பாடல் என்று பதிவிட்டு சாம் சி.எஸ் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.

View this post on Instagram

#coronasong

A post shared by 𝐒𝐀𝐌 𝐂 𝐒 (@samcsmusic) on


Advertisement