பயணத்தின் போது அடிக்கடி வாந்தி எடுப்பவர்களா நீங்கள்.? இனி கவலை வேண்டாம்.. உங்களுக்கான டிப்ஸ் இதோ..!

பயணத்தின் போது அடிக்கடி வாந்தி எடுப்பவர்களா நீங்கள்.? இனி கவலை வேண்டாம்.. உங்களுக்கான டிப்ஸ் இதோ..!



Do you often vomit while traveling? Worry no more.. here are the tips for you..!

பயணம் என்பது வாழ்க்கையின் மிகப்பெரிய இன்பங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் நம்மில் சிலருக்கு வெகுதூரம் பயணம் மேற்கொள்ளும் போது வாந்தி, மயக்கம், தலைசுற்றல் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.  இதனால் மகிழ்ச்சியான பயணம் கூட பரிதாபகரமான ஒன்றாக மாறிவிடுகிறது.

ஒரு சில டிப்ஸ்களை கொண்டு பயணத்தின் போது அடிக்கடி வாந்தி வராமல் தவிர்க்கும் முறைகளை கீழ்க்கண்டவாறு பார்க்கலாம். அவை 1) ஒரு கைக்குட்டையில் புதினா எண்ணெய் 3 துளிகள் சேர்த்து நினைத்து நம் பயணத்தின் போது நாம் எடுத்துக் கொண்டு செல்லலாம். இந்த புதினா எண்ணெய் வாசமானது நம் உடம்பில் ஏற்படும் குமட்டலை கட்டுப்படுத்தும்.

Vomitting sensation

2) மேலும் நம் பயணத்தின் போது ஒரு எலுமிச்சை பழத்தை கையில் கொண்டு செல்வது மிக நன்று. ஏனென்றால் இந்த எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரஸ் வாசமானது பயணத்தின் போது ஏற்படும் உபாதைகளை குறைக்க உதவுகிறது. அத்துடன் எலுமிச்சை பழமானது நம் உடம்பில் உள்ள வயிற்று அமிலங்களை சமநிலைப்படுத்துகிறது.

3) மேலும் நம் பயணத்தின் போது ஏலக்காயை சிறிது வாயில் போட்டு மெல்லலாம். இதுவும் குமட்டல் மற்றும் வாந்திகளை கட்டுப்படுத்த உதவும் சிறந்த வீட்டு வைத்தியம் ஆகும். 4) அத்துடன் பயணத்தின் போது வாந்தி, மயக்கம், தலைசுற்றல் போன்றவை வராமல் தடுக்க உடலை நீர் சத்துடன் வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

5) அதுமட்டுமல்லாமல் பயணத்தின் போது கடினமான உணவுகளை உட்கொள்வதை தவிர்ப்பது மிக நல்லது. மேலும் முடிந்தவரை நீர்ச்சத்து அதிகம் உள்ள பழச்சாறுகளை அருந்திவிட்டு பயணம் செய்யலாம்.