AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
காலை நேரத்தில் குடிக்கும் பானம் சீரகம் இல்ல கொத்தமல்லி தண்ணீர்! இரண்டில் எதில் நன்மை அதிகம்?
ஆரோக்கியமான வாழ்கையை விரும்பும் அனைவரும் காலை நேரத்தில் குடிக்கும் பானங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக உடல் எடை குறைப்பு மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும் இயற்கை பானங்கள், தினசரி ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சீரக தண்ணீர் மற்றும் கொத்தமல்லி தண்ணீர் முக்கிய பங்காற்றுகின்றன.
சீரக தண்ணீர் – உடல் எடை கட்டுப்பாட்டுக்கு
ஒரு லிட்டர் சீரக தண்ணீரில் வெறும் 7 கலோரிகள் மட்டுமே உள்ளன. இதனால் கலோரியை குறைக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும். செரிமான நொதிகளை தூண்டி செரிமானத்தை எளிதாக்கும். மலச்சிக்கல் பிரச்சினையுள்ளவர்களுக்கு சிறந்தது. சீரகத்தில் உள்ள பயோ ஆக்டிவ் சேர்மங்கள் வயிறு வீக்கத்தை குறைத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், பயோபிளவனாய்டுகள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து கொழுப்பை எரித்து, உடல் ஆற்றலை ஊக்குவிக்கின்றன. இன்சுலின் உணர்திறனை உயர்த்துவதால் ரத்த சர்க்கரை அளவையும் ஒழுங்குபடுத்துகிறது.
கொத்தமல்லி தண்ணீர் – நச்சு நீக்கமும் ஹார்மோன் சமநிலையும்
கொத்தமல்லி தண்ணீரில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் C மற்றும் E நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி புதிய நோய் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கின்றன. நாளமில்லா சுரப்பிகளைத் தூண்டி ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்துகிறது. பெண்களின் மாதவிடாய் பிரச்சினைகளை சீர்செய்யவும், தைராய்டு ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. டையூரிடிக் பண்புகள் நச்சுக்களை வெளியேற்றி சிறுநீரகம், கல்லீரலை சுத்தம் செய்கின்றன. மேலும், சிறுநீர் உற்பத்தியை அதிகரித்து வயிறு வீக்கத்தைத் தடுக்கின்றன.
இதையும் படிங்க: உடல் எடையை ஈஸியா குறைக்கணுமா? அப்போ இந்த காய்கறிகளை சாப்பிடுவதால் உடம்பில் நடக்கும் அதிசயம் பாருங்க.....
எது சிறந்தது?
சீரக தண்ணீர் மற்றும் கொத்தமல்லி தண்ணீர் இரண்டும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி அதிக கலோரிகளை எரிக்க உதவும். ஹார்மோன் சமநிலை மற்றும் திரவ சீராக்கம் தேவைப்படுகிறவர்களுக்கு கொத்தமல்லி தண்ணீர் சிறந்தது. உடல் எடை கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துபவர்கள் சீரக தண்ணீரை தேர்வு செய்யலாம்.
தயாரிப்பு முறை
சீரக தண்ணீர்: 1 டேபிள்ஸ்பூன் சீரகம், 1 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலை வடிகட்டி குடிக்கவும்.
கொத்தமல்லி தண்ணீர்: அதே முறையில் கொத்தமல்லி விதைகளை பயன்படுத்தவும்.
இயற்கை பானங்களை காலை நேரத்தில் பழக்கமாக்கினால் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, நோய்களைத் தடுக்கவும், வாழ்வை சுறுசுறுப்பாக மாற்றவும் உதவும்.
இதையும் படிங்க: கொய்யா இலையை அரைத்து 21 நாட்கள் குடித்து வந்தால்... இவ்வளவு நோய்களுக்கு தீர்வு கிடைக்குமா.!?