கொய்யா இலையை அரைத்து 21 நாட்கள் குடித்து வந்தால்... இவ்வளவு நோய்களுக்கு தீர்வு கிடைக்குமா.!?



Health benefits of eating guava leaf at 21 days

பொதுவாக கொய்யா இலையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. பாரம்பரிய மருத்துவங்களில் கொய்யா இலைகளை பல வழிகளில் பயன்படுத்துகிறார்கள். இதன் மருத்துவ குணங்கள் பற்றி விரிவாக இப்பதிவில் பார்க்கலாம். நீரிழிவு நோய் - கொய்யா இலையில் இருக்கும் வேதிப்பொருள், ரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகின்றன. குறிப்பாக, அது உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து, உடலில் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்துகிறது. இதனால், சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் பயன்படுகிறது.
இதய நோய் -  கொய்யா இலை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள், நம் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் இரத்தத்தை சரியான முறையில் சுத்திகரிக்க உதவுகிறது. இதனால் இதயநோய் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி - கொய்யா இலையில் உள்ள பைட்டோநூட்ரியன்ட்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இவை பாக்டீரியா, வைரஸ் மற்றும் பிற தொற்றுகளை எதிர்த்து, உடலை பாதுகாத்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

Guava

செரிமான கோளாறு - கொய்யா இலைகள், உடலில் ஏற்படும் ஜீரண பிரச்சினை மலச்சிக்கல், உடல் எடை அதிகரிப்பு, மற்றும் குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
உடல் எடை குறைப்பு - கொய்யா இலையில் உள்ள சில வேதிப்பொருட்கள் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைய உதவிபுரிகிறது.
வலி நிவாரணி -  உடலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தில் கொய்யா இலையை அரைத்து கட்டலாம். இது சிறந்த வலி நிவாரணியாக செயல்படும்.
தோல் நோய்கள் -  கொய்யா இலைகளை அரைத்து தேய்த்து குளித்து வரலாம். இதிலுள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஃபங்கல் குணங்கள், தோலில் உள்ள புண், அரிப்பு வறட்சி போன்றவற்றை சரி செய்கிறது.
எப்படி பயன்படுத்தலாம் - கொய்யா இலைகளை காய வைத்து பொடி செய்து பால் அல்லது சுடு தண்ணீரில் கலந்து தினமும் காலையில் குடித்து வரலாம். இலைகளை நன்றாக கழுவி அரைத்து சாறு எடுத்து குடித்து வரலாம் இவ்வாறு 21 நாட்கள் செய்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பலவிதமான நோய்கள் குணமடையும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வெறும் கொய்யா இலையில்.. இவ்வளவு  விஷயமிருக்கா.?! இத்தனை நாளாக தெரியாம போச்சே.?! 

இதையும் படிங்க: இந்த நோய் இருப்பவர்கள் வெந்தயத்தை கண்டிப்பாக உணவில் சேர்க்க கூடாது.. ஏன் தெரியுமா.!?