இந்த நோய் இருப்பவர்கள் வெந்தயத்தை கண்டிப்பாக உணவில் சேர்க்க கூடாது.. ஏன் தெரியுமா.!?



Health benefits about Fenugreek

வெந்தயத்தின் மருத்துவ பண்புகள்

பொதுவாக  நம் முன்னோர்கள் மருத்துவம் மற்றும் உணவுக்காக வெந்தயத்தை பல வகைகளில் பயன்படுத்தி வந்தனர். வெந்தயம் சாப்பிடுவது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வெந்தயத்தின் முக்கிய மருத்துவ பண்புகள் குறித்தும், எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்தும் இப்பதிவில் விளக்கமாக காணலாம்.

என்னென்ன நோய்களை குணப்படுத்தும்?

நீரிழிவு நோய் : வெந்தயம் சர்க்கரை நோயினை கட்டுப்படுத்துவதில் பெரிதும் உதவுகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.
செரிமான பிரச்சனை : வெந்தயம் செரிமான சக்தியை மேம்படுத்தி மலச்சிக்கலுக்கு ஒரு சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. மேலும் குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
கர்ப்பப்பை பிரச்சனைகள்:  பெண்களின் கர்ப்பப்பையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கிறது. அதாவது மாதவிடாய் பிரச்சனைகள், வயிறு வலி, கர்ப்பப்பை கட்டி போன்ற பிரச்சனைகளுக்கு உதவி புரிகிறது.

இதையும் படிங்க: வெறும் கொய்யா இலையில்.. இவ்வளவு  விஷயமிருக்கா.?! இத்தனை நாளாக தெரியாம போச்சே.?! 

fenugreek

இதய பாதுகாப்பு : வெந்தயம் இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவை குறைத்து  இதயநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
மூட்டுவலி : தினமும் உணவில் வெந்தயம் சேர்த்து கொண்டால் எலும்புகள் ஆரோக்கியமாவதுடன் மூட்டு வலி, முதுகு வலி ஏற்படாமல் தடுக்கிறது.
உடல் சூடு - சூட்டு பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயத்தை தினமும் இரவில் ஊற வைத்து காலையில் தண்ணீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டு பிரச்சனை குறையும்.
பொடுகு, அரிப்பு தொல்லை - தோல் மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் பொடுகு தொல்லைகளுக்கு வெந்தயம் சிறந்த நிவாராணியாக பயன்படுகிறது. இதனை இரவில் ஊற வைத்து காலையில் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்களுக்கு பின்பு குளித்து வந்தால் பிரச்சனை தீரும்.
சிறுநீரக பாதிப்புகள்: சிறுநீரகம் மற்றும் சிறுநீரக குழாயில் உள்ள கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய வெந்தயத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வெந்தயம் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்
வெந்தயத்தை அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால் மூக்கடைப்பு, சளி, இருமல், உடல் துர்நாற்றம், சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும் சைனஸ், ஆஸ்துமா பிரச்சனையிருப்பவர்கள் வெந்தயத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இதையும் படிங்க: வாழைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவர்கள் அறிவுரை என்ன.!?