குழந்தைகளின் உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போகுதா.. இந்த உணவுகளை கொடுப்பதை அறவே நிறுத்துங்கள்.?



childrens-healthy-foods

நம் வயது முதிர்ந்த காலத்தில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் சிறு வயது முதலே நம் உணவில் கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்க வேண்டும். உணவு கட்டுப்பாடு என்பது இந்த கால குழந்தைகளின் மத்தியில் மிகவும் கஷ்டமான ஒன்றாக இருந்து வருகிறது.

Healthy

குழந்தைகள் உணவு விஷயத்தில் எவ்வளவு அடம்பிடித்தாலும் நாம் ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பதே சிறந்தது. அவர்களின் நோய் எதிர்ப்பு சக்திக்காகவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒரு சில உணவுகள் அவர்களுக்கு தராமல் இருக்க வேண்டும்.

"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்" என்ற பழமொழியை கேட்டிருப்போம். ஆனால் இந்த ஐந்து தின்பண்டங்களை அளவாக சாப்பிட்டாலும் நம் உடலுக்கு நஞ்சு தான் விளைவிக்கும். இந்த வரிசையில் முதன்மையாக இருப்பது சாக்லேட்.

Healthy

குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள் என்று அவர்களுக்கு கொடுக்கக் கூடாது. மேலும் வைட் பிரட், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு தராமல் நோயற்ற வாழ்வு குறையாமல் செல்வமாக நம் குழந்தை செல்வத்தை வளர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.