
இளம் குழந்தை ஏர் கலப்பை பிடித்து விவசாயம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
பல ஆண்டுகளாக போதிய அளவு மழை பெய்யாததால் பெரும்பாலான பகுதிகளில் விவசாயம் பொய்த்துப் போனது. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக வேளாண்மை செய்துவந்துள்ள சமூகம் தற்போது விவசாயத்தில் போதுமான அளவு வருமானம் கிடைக்காததாலும் பலர் விவசாயத்தை கைவிட்டுள்ளனர்.
ஆனால் தற்போது பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் பல மாணவர்கள் வேளாண்மை துறையை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் என்னதான் படித்துவிட்டு ஏசி ரூமில் உட்கார்ந்து கைநிறைய பணம் சம்பாதித்தாலும், சொந்த மண்ணில் விவசாயம் செய்து, குடும்பத்துடன் வாழ்வதே சந்தோசம் என கூறுகின்றனர் பல படித்த இளைஞர்கள்.
ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிந்த பலர் தங்களது வேலைகளை விடுத்து, விவசாயம் செய்து அதிகம் பணம் சம்பாதிப்பதாக கூட பல ஊடங்கங்களில் செய்திகள் வந்தன. விவசாயம் தான் தேசத்தின் உயிர் மூச்சு என்பதை உணர்த்தும் வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது விளையாடும் வயதில், இளம் குழந்தை ஏர் கலப்பை பிடித்து விவசாயம் செய்யும் வீடியோ தான் அது. அந்த வீடியோவை பார்த்த பலரும் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்த கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement