நாக பாம்பிடம் சண்டைபோட்டு தனது குஞ்சுகளை காக்கும் தாய் கோழி..! பார்க்கும்போதே நடுங்கவைக்கும் வைரல் வீடியோ..!

நாக பாம்பிடம் சண்டைபோட்டு தனது குஞ்சுகளை காக்கும் தாய் கோழி..! பார்க்கும்போதே நடுங்கவைக்கும் வைரல் வீடியோ..!


Brave mom save her chicks from cobra fighting video goes viral

பொதுவாகா தாய்மை என்றாலே அந்த உணர்வு இந்த உலகில் அனைத்து உயிர்களும் பொதுவான ஒன்று. தனது பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் தாய்மை உணர்வு கொண்ட அனைத்து உயிர்களும் தங்கள் பிள்ளைகளை காப்பாற்ற தங்கள் உயிரையும் கொடுக்க துணிந்துவிடுவார்கள்.

அந்த வகையில் இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுசாந்தா நந்தா அவர்கள் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்றில், தனது குஞ்சுகளை கொத்தி சாப்பிட வரும் நல்ல பாம்பு ஒன்றை கோழி தனது உயிரையும் பணயம்வைத்து கொத்தி விரட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது.

சுமார் 51 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்தவாறு கோழிக்குஞ்சுகளை பிடிக்கச்செல்கிறது. இதனை பார்த்த தாய் கோழி பாம்பிடம் இருந்து தனது அனைத்து குஞ்சுகளையும் காப்பாற்ற போராடுகிறது. வீடியோவை பார்க்கும்போதே நமது உடல் நடுங்கும் இந்த காட்சியில் கோழி ஒருவழியாக தனது அனைத்து குஞ்சுகளையும் காப்பாற்றுகிறது. இதோ அந்த வீடியோ.