உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் ஆரோக்கியமான இயற்கை மூலிகைகள்.!



Body cleaning natural medicines

உடலில் உள்பகுதிகளில் சேரும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. அந்த வகையில் உடல் கழிவுகளை வெளியேற்றும் இயற்கையான ஆயுர்வேத மூலிகைகள் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

Body cleaning

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் கலந்த கலவையான திரிபலா சூரணம் கழிவுகளை வெளியேற்றும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. திப்பிலியை பொடியாக செய்து அதனை தேநீரில் கலந்து குடிப்பதால் ரத்தம் சுத்தமாகும்.

அதேபோல் முருங்கைக்கீரை பவுடரை சூப் செய்தோ, உணவில் கலந்து சாப்பிட்டாலோ நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதால் கல்லீரல் சுத்தமாகும்.

Body cleaning

ஆயுர்வேத மூலிகையான அஸ்வகந்தா ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி செரிமான சக்தியை அதிகரிக்கிறது. தேங்காய் எண்ணெய் கொண்டு வாய் கொப்பளிப்பதால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து வாய் சுத்தமாகும்.