ஆண்மை குறைபாடு முதல் நரம்புத்தளர்ச்சி பிரச்சினை வரை சரி செய்யும் பூனைக்காலி விதை.! எப்படி பயன்படுத்தலாம்.!?Benefits of eating poonaikali vithai

வெப்பநாடுகளில் சாதாரணமாக வளரும் பூனைக்காலி செடி புரதத்தின் முக்கிய மூலமாக வருகிறது. பூனைக்காலி விதைகள் பூ, இலை, வேர் என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. இந்தச் செடியை பயன்படுத்தினால் நம் உடலில் தலை கால் வரை ஏற்படும் அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்தலாம் என்று சித்த மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதை எப்படி பயன்படுத்தலாம், என்னென்ன நோய்களை குணப்படுத்துவது என்பதை விரிவாக பார்க்கலாம்?

பூனைக்காலி விதை

பூனைக்காலி விதையை வறுத்து பொடி செய்து தினமும் இரவில் பாலில் கலந்து குடித்து வந்தால், ஆண்மை குறைபாடு பிரச்சனையை சரி செய்யும். மேலும் விந்தணுக்களின் தரத்தை உயர்த்தி விந்தணுக்களில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதனால் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்து குழந்தையின்மையை போக்குகிறது.

வெல்வெட் பீன்ஸ் என்று அழைக்கப்படும் பூனை காலி விதை நரம்பு தளர்ச்சி பிரச்சனை, பார்கின்சன் நோய் போன்றவற்றையும் சரி செய்கிறது. இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பூனைக்காலி விதையை அதிகமாக காணலாம். குறிப்பாக இதய நோய் மற்றும் மூளையில் ஏற்படும் பாதிப்பால் உருவாகும் பக்கவாதம், கீழ்வாதம் போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

பூனைக்காலி விதை

பூனைக்காலி செடியில் உள்ள இலைகளை அரைத்து எலும்பு பகுதியில் தடவி வந்தால் மூட்டு வலி, கை, கால் வலி போன்றவை குணமாகும். இதன் விதைகளை வேகவைத்து உண்பதன் மூலம் உடலில் ஊட்டச்சத்துக்கள் அதிகரித்து உடல் பலப்படும். வயதானவர்களுக்கு உடலில் ஏற்படும் குறைபாடுகளை முற்றிலுமாக குணப்படுத்துகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய பூனைக்காலி செடியை அடிக்கடி உணவில் பயன்படுத்த வேண்டும்.