தினமும் ஒரு வேக வைத்த முட்டை சாப்பிட்டு பாருங்க.? உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா.!?Benefits of eating boiled egg

வேக வத்த முட்டை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

பொதுவாக நாம் அன்றாடம் உண்ணும் உணவைப் பொறுத்தே நம் உடல் நிலை இருக்கும் என்பதால் தான் தினமும் ஊட்ட சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பெரியவர்களும், மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர். ஊட்டச்சத்தான உணவுகளை உண்ணும் போது நம் உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கிறது. இதில் குறிப்பாக தினமும் ஒரு வேக வைத்த முட்டை சாப்பிடுவதால் பல்வேறு வகையான மாற்றங்கள் உடலில் ஏற்படுகிறது. இது குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

Boiled Egg

வேக வைத்த முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

வேக வைத்த முட்டையில் கால்சியம், புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால் இது எலும்புகளுக்கு ஊட்டச்சத்தை அளித்து பலப்படுத்துகிறது. மேலும் நம் சருமம் மினுமினுப்பாகவும், மென்மையாகவும் இருப்பதற்கு தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வர வேண்டும். முட்டையில் வைட்டமின் டி ஊட்டச்சத்து உள்ளதால் இது நம் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்ற கிருமிகளை எதிர்த்து போராடும் ஆற்றலை தருகிறது.

இதையும் படிங்க: ஒரே வாரத்தில் உடல் எடை குறைய வேண்டுமா.? இந்த ஒரு பழம் போதும்.? ட்ரை பண்ணி பாருங்க.!?

மேலும் மூளையின் ஆற்றலுக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய ஆதாரமாக கோலின் என்ற வேதிப்பொருள் இருந்து வருகிறது. இது முட்டையில் அதிக அளவு இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் முட்டை சாப்பிடுவது சிறந்த ஊட்டச்சத்தான உணவாக கருதப்பட்டு வருகிறது. முட்டையில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் தினமும் உணவாக எடுத்துக் கொள்ளும்போது உடலுக்கு தேவையான ஆக்சிஜன் உடலில் உள்ள உறுப்புகளுக்கு சீராக எடுத்துச் செல்ல உதவுகிறது.

Boiled Egg

கர்ப்பிணி பெண்கள் முட்டை சாப்பிடலாமா

மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, செலினியம், பாஸ்பரஸ் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் வேகவைத்த முட்டையில் நிறைந்து இருப்பதால் தினமும் ஒரு வேகவைத்த முட்டை சாப்பிட்டு வரும் போது தலை முதல் கால் வரை பல்வேறு நன்மைகளையும் தருகிறது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் கட்டாயமாக வேக வைத்த முட்டையை சாப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காலையில் வெறும் வயிற்றில் முளைகட்டிய பயிர்களை சாப்பிடக்கூடாது.? ஏன் தெரியுமா.!?