வாழைப்பழத்தில் எது நல்லது? முழு விபரம் இதோ.!
உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் வாழைப்பழம் பல்வேறு நலன்களை வழங்குகிறது.
செரிமான அமைப்புக்கு நன்மை தரும்:
உலகில் அதிகம் சாப்பிடப்படும் பழங்களில் ஒன்றான வாழைப்பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமானது ஆகும். வாழைப்பழத்தின் சுவை மற்றும் உடலுக்கு வழங்கும் ஆற்றல் நல்லது என்றாலும், அதில் பழுத்த வாழைப்பழம் சாப்பிடலாமா? அல்லது நன்கு பழுத்த வாழைப்பழம் சாப்பிடலாமா? என பலருக்கும் சந்தேகம் இருக்கும். பகுதியளவு பழுக்காத வாழைப்பழத்தில் எதிர்ப்புத்தன்மை மாவுசத்து அதிகம் இருக்கும். இது செரிமான அமைப்புக்கு நன்மை தரும்.
இதையும் படிங்க: Green Banana: பச்சை வாழைப்பழம் கேட்டு வாங்கி சாப்பிடுங்க.. என்னென்ன நன்மைகள்? தெரிஞ்சிக்கோங்க..!

ரத்த சர்க்கரை அளவு:
குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை வளர உதவி செய்யும். செரிமானத்தை மேம்படுத்துவதில் வாழைப்பழத்தின் பங்கு அளப்பரியது ஆகும். இதன் நார்சத்து நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வு தரும். பசி தீவிரமடையாமல் பாதுகாக்கும். உடல் எடையினை குறைக்க விரும்புவோருக்கு வாழைப்பழம் நல்ல தேர்வு ஆகும். முழுமையாக பழுக்காத வாழைப்பழம் மெதுவாக செரிக்கும். இது ரத்த சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்காது. கிளைசெமிக் குறியீடும் குறைவு ஆகும். நீரிழிவு நோயாளிகள் இவ்வகை வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது.

ஆற்றல் கொடுக்கும்:
நன்கு பழுத்த வாழைப்பழத்தில் மாவுசத்து சர்க்கரையாக மாற்றப்படும். இது இனிப்பு, மென்மைத்தன்மையுடன் இருக்கும். பழுத்த வாழைப்பழம் எளிதில் செரிமானமாகி, உடலுக்கும் ஆற்றலை கொடுக்கும். விளையாட்டு வீரர்கள், அதிக உடல் உழைப்பில் இருப்பவர்களுக்கு இது ஏற்றது. பழுத்த வாழைப்பழத்தில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட் நோயெதிர்ப்பு சக்தி வழங்கும். குழந்தைகள், முதியவர்களுக்கும் ஏற்றது. பழுக்காத வாழைப்பழம் மலச்சிக்கலை உண்டாக்கும். அதிகம் பழுத்த வாழைப்பழமும் ரத்த சர்க்கரை அளவை உயர்த்தும்.
இதையும் படிங்க: மலச்சிக்கல் முதல் இதய ஆரோக்கியம் வரை.. நார்ச்சத்து நிறைந்த இந்த பழங்கள் போதும்.!