லைப் ஸ்டைல்

எலும்புக்கு ஊட்டச்சத்து அளிக்கும் சுவையான பாதாம்பால்... வீட்டிலேயே 5 நிமிடத்தில் செய்வது எப்படி?..!

Summary:

எலும்புக்கு ஊட்டச்சத்து அளிக்கும் சுவையான பாதாம்பால்... வீட்டிலேயே 5 நிமிடத்தில் செய்வது எப்படி?..!

சுலபமான முறையில் சுவையான பாதாம்பால் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பது குறித்ததுதான் இந்த செய்திக்குறிப்பு.

சோயாபுரதம், பால்புரதம் மற்றும் செரிமான கோளாறு இருப்பவர்கள் பாதாம் பால் குடிப்பதால் தேவையான சத்துகள் கிடைக்கிறது. அத்துடன் பாதாம் பாலில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளதால் எலும்புக்கு ஊட்டச்சத்தும் அளிக்கிறது.

தேவையான பொருட்கள் :

கெட்டியான பால் - 3 கப் 
ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி சர்க்கரை - 100 கிராம் 
குங்குமப்பூ - சிறிதளவு 
பாதாம் - 1கைப்பிடி

செய்முறை :

★முதலில் ஒரு கைப்பிடி அளவிற்கு பாதாம் பருப்பை எடுத்து, அலசி முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

★பின் பாதாம் பருப்பை தோல் நீக்கி, சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

★அடுத்து பிஸ்தா, பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை ஒரு தேக்கரண்டி எடுத்து நன்றாக இடித்து வைத்து கொண்டால், மேலே அலங்கரிப்பதற்கு தேவைப்படும்.

★தொடர்ந்து தோலுரித்த பாதாம் பருப்பை மிக்ஸியில் நைசாக அரைத்து, சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

★பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் கெட்டியான பால் 3 கப் அளவிற்கு ஊற்றி, நன்கு கொதிக்க விட்டு அரைத்து வைத்த பாதாம் விழுதை சேர்க்க வேண்டும்.

★அடுத்து தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து, ஒரு தேக்கரண்டி குங்குமப்பூ சேர்த்துக் கொள்ள வேண்டும்.

★இறுதியாக ஏலக்காயை நைசாக அரைத்து மேலே தூவி பால் கெட்டியான பதத்திற்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து, பொடித்து வைத்த நகைகளை தூவினால் தயாராகிவிடும்.

★அத்துடன் ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று இதனை பருகலாம். வெயிலுக்கு இதமாக, குளிர்ச்சியாக இருக்கும்.


Advertisement