மழைக்காலத்தில் இந்த உணவுகளை எல்லாம் மறந்தும் கூட சாப்பிடாதீங்க.!

மழைக்காலத்தில் இந்த உணவுகளை எல்லாம் மறந்தும் கூட சாப்பிடாதீங்க.!



avoid-this-food-during-rainy-season

இந்தியாவில் தற்போது பருவ மழைக்காலமாகும். இந்த சமயத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நோய்த்தொற்றுகள், சளி, இருமல், ஒவ்வாமை, அஜீரணக்கோளாறு ஆகியவை ஏற்படும். எனவே இந்த நேரத்தில் நாம் உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும்.

Food

கீரைவகைகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது தான். ஆனால் பருவமழை காலங்களில் கீரைகளை தவிர்ப்பது நல்லது. இவற்றில் சத்துக்கள் நிறைய இருந்தாலும் மழைக்காலத்தில் அஜீரணக் கோளாறை ஏற்படுத்தும். மேலும் இலை காய்களான முட்டைகோஸ், காலிஃபிளவர் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும்.

இவற்றை மழைக்காலத்தில் உட்கொள்வதால் கிருமித்தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் பெப்சி, கோக் மழைக்காலங்களில் தவிர்த்தல் நல்லது. மேலும் மழைக்காலங்களில் மைதாவில் செய்யப்படும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவை வயிற்றில் மந்தத் தன்மை மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.

Food

மேலும் புளிப்புத்தன்மை கொண்ட உணவுகள் மற்றும் ஊறுகாய் வகைகளை மழைக்காலத்தில் உண்ணக்கூடாது. மேலும் மழைக்காலங்களில் தயிர் சேர்ப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதனால் சளி, இருமல் ஏற்படுவதை தவிர்க்கலாம்.