உஷார்..! வெயில் காலத்தில் வீட்டிற்குள் படையெடுக்கும் பாம்புகள்.! உங்கள் வீட்டிற்குள் வராமல் இருக்க உடனே இதனை செய்யுங்கள்.!

உஷார்..! வெயில் காலத்தில் வீட்டிற்குள் படையெடுக்கும் பாம்புகள்.! உங்கள் வீட்டிற்குள் வராமல் இருக்க உடனே இதனை செய்யுங்கள்.!


avoid-snake-in-home

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். காரணம் பாம்பிற்கு உயிரை பறிக்கும் விஷத்தன்மை உள்ளது. பொதுவாக பாம்புகள் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தை தான் வாழிடமாக கொண்டிருக்கும். அதுபோல் கிராம புறங்களில் வயல்வெளிகளில் பாம்புகள் அதிகமாக காணப்படும். இரவு நேரத்தில் தான் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

தற்போது வயல்வெளிகள், காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருவதால் பாம்புகள் மக்களின் இருப்பிடத்திற்கு அருகேயே சுற்றித்திரிகின்றன. அதிலும் தற்போது வெயில்காலம் என்பதால் இரவு நேரத்தில் வீடுகளுக்குள்ளும் புகுந்து செல்கின்றது. இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாததால் பாம்புகள் எளிதில் வீட்டிற்குள் செல்ல நேரிடுகிறது. 

பாம்புகள் வீட்டிற்குள் வராமல் இருக்க நாம் முக்கிய வழிமுறைகளை மேற்கொள்ளவேண்டும். வீட்டின் வாசலில் குப்பைகளை சேர்த்துவைக்க கூடாது. வீட்டை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் கழிவு நீர் ஓட்டையை மறக்காமல் அடைத்துவைக்க வேண்டும். சிலிண்டர் வாங்கும்பொழுது அதன் அடிப்புறத்தை நன்கு சோதனை செய்த பிறகு வீட்டிற்குள்ளே எடுத்துச்செல்ல வேண்டும்.snake

வீட்டு வாசலில் கிடக்கும், ஷூ மற்றும் செருப்புகளை தரையில் வைக்காமல் அதெற்கென ஸ்டான்ட் ஒன்றை வைத்து அதன் மீது வைக்கவேண்டும். காலணிகளை அணிவதற்கு முன்பு நன்கு சோதனை செய்த பிறகே அணியவேண்டும். இரவு நேரத்தில் வெளியில் நடந்து செல்பவர்கள் வெளிச்சம் இல்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும். இதுவொரு விழிப்புணர்வு பதிவு. பலருக்கும் பகிர்ந்து பயனடைய செய்வோம்.