71 லிட்டர் பெட்ரோல் இலவசம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Summary:

71 litters free petrol in indian oil petrol bunk

நாளுக்கு நாள் பெட்ரோல் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டே போகிறது. இந்நிலையில் 71 லிட்டர் பெட்ரோலை இலவசமாக தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது இந்தியன் ஆயில் நிறுவனம்.

இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் இந்தச் சலுகைகளைப் பெற வேண்டும் என்றால் அவர்களிடம் சிட்டி பாங்க் கிரெட்டிட் கார்டு இருக்க வேண்டும். ஏற்கனவே சிட்டி பேங்க் கிரெடிட் கார்ட் வைத்துள்ளவர்கள் மட்டும் இல்லாமல், புதிதாக சிட்டி பேங்க் கிரெடிட் கார்ட் வாங்கும் வாடிக்கையளார்களும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.

இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில் சிட்டி பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி 150 ரூபாய்க்கும் அதிகமாகப் பெட்ரோல் போடும் போது 4 டர்போ பாயிண்ட்கள் வழங்கப்படும். இதன் மதிப்பு 1 ரூபாய். வாடிக்கையாளர்கள் இந்த டர்போ பாயிண்ட்களை மொத்தமாக அல்லது தனித்தனியாகவும் தேவைப்படும் போது ரூபாயாக மாற்றிக்கொள்ளலாம்.

தொடர்ந்து ஒரு வருடத்திற்கு வழங்கப்படும் இந்தச் சலுகை மூலம் அதிகபட்சம் 71 லிட்டர் வாங்க கூடிய அளவிலான பணத்தை டர்போ பாயிண்ட்களாகப் பெற முடியும். இதே போன்று எஸ்பிஐ வங்கி உட்படப் பிற வங்கிகளும் 5 லிட்டர் பெட்ரோல் வரை இலவசமாக வழங்குகின்றன.


Advertisement