இந்தியா

ரயிலில் இளம்பெண்ணிற்கு முதியவர் கொடுத்த வாழைப்பழம்.! அதனை சாப்பிட்ட அடுத்த நிமிடத்தில் நடந்த கொடூரம்.!

Summary:

ரயிலில் செல்லும் போது காணமல் போன மனைவியை, மூன்று நாட்கள் போராடி கணவன் கண்டுபிடித்த சம்பவம் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலம் பாலாசூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திர ஜனா. இவரின் மனைவி கபீர் ஜனா. இந்த தம்பதி புதுச்சேரியில் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தனர். இந்த தம்பதியின் மகன் ஒடிசாவில் உள்ள அவரது பாட்டியுடன் தங்கி படித்து வந்துள்ளார். வருடத்திற்கு  ஒருமுறை இவர்கள் சென்று தனது மகனைப் பார்த்து வருவது வழக்கம்.

இந்தநிலையில், இந்தமுறை மகனை பார்ப்பதற்காக தனது மனைவி கபீரை மட்டும் கடந்த 9-ஆம் தேதி புதுச்சேரியில் இருந்து புவனேஸ்வர் செல்லும் ரயிலில் ரவீந்திர ஜனா அனுப்பிவைத்துள்ளார். ஆனால் ரயில் ஒடிசாவைச் சென்றடைந்ததும் ரயிலில் கபீர் இல்லாததை அறிந்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கணவன் அதிர்ச்சியடைந்து தனது மனைவியைக் காணவில்லை என காவல் நிலையத்தில்புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து  ரவீந்திர ஜனா ஒரு கார் மூலம் ஒடிசா மாநிலத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். வழி முழுவதும் 3 நாட்களாய் ஒவ்வொரு ரயில் நிலையமாக மனைவியைத் தேடிச் சென்றுள்ளார். அப்போது ஒடிசா மாநிலத்திற்கு உட்பட்ட பாலேஸ்வர் என்ற பகுதியில் கபீரின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து பாலேஸ்வர் ரயில் நிலையத்தில் விசாரித்தபோது, மயங்கிய நிலையில் ஒரு பெண்ணை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது மனைவி கபீர் அங்கு இருந்துள்ளார். இதனையடுத்து அவரிடம் விசாரித்தபோது ரயிலில் பயணித்த முதியவர் ஒருவர் வாழைப்பழம் கொடுத்ததாகவும் அந்த வாழைப்பழத்தை கபீர் சாப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அந்தப் பழத்தைச் சாப்பிட்ட சில நிமிடங்களில்கபீர் மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல் போயுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Advertisement