புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
சட்டவிரோத கருக்கலைப்பு... துடி துடித்து இறந்த இளம் பெண் .!! மாமியார், கணவன் கைது.!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ரகசியமாக கருக்கலைப்பு செய்தது தொடர்பாக 24 வயது இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் உட்பட 3 பேரை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீண்டும் கர்ப்பமான இளம் பெண்
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர் திருமணமாகி தனது கணவன், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்தப் பெண்ணிற்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில் அந்த இளம் பெண் மீண்டும் கர்ப்பமாகி இருக்கிறார். ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளதால் இந்தக் கருவை கலைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கருக்கலைப்பு
இந்நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது மாமியார் மற்றும் கணவன் ஆகியோர் வீட்டில் வைத்து சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிகமான ரத்தப் போக்கில் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: உபி-யில் அதிர்ச்சி... மாணவியின் குளியலறையில் ரகசிய கேமரா... அந்தரங்க காட்சிகளை பதிவு செய்த ஹவுஸ் ஓனர்.!!
குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்
இதனைத் தொடர்ந்து இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட அந்தப் பெண்ணின் மாமியார், கணவர் மற்றும் மாமனார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பெண் இறந்தது தொடர்பாக அவரது மாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: சொட்ட சொட்ட இரத்தம்... 10:மாத குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.!! இளைஞர் கைது.!!