புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
சொட்ட சொட்ட இரத்தம்... 10 மாத குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.!! இளைஞர் கைது.!!
குஜராத் மாநிலத்தில் 10 மாத குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீபக் குமார் என்ற நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஏழைத்தாய்
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மிகவும் ஏழ்மை நிலையில் கஷ்டப்பட்டு வருகிறார். ஹோட்டல்களில் வேலை செய்து வரும் இந்த பெண்ணிற்கு 10 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் தீபக் குமார் என்ற நபர் இந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்து குழந்தையுடன் விளையாடி இருக்கிறார். அந்தப் பெண்ணும் குழந்தையுடன் இந்த நபர் பாசமாக விளையாடுகிறார் என கருதி உள்ளார்.
குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அந்த பெண் வேலைக்கு சென்ற நிலையில் அவரது வீட்டிற்கு வந்த தீபக் குமார் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை வேறொரு இடத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து எதுவும் நடக்காதது போல் குழந்தையை அதன் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.
இதையும் படிங்க: பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கௌரவ கொலை... தாய், சகோதரர்கள் நிகழ்த்திய கொடூரம்.!!
கதறி துடித்த குழந்தை
இந்நிலையில் குழந்தை கதறி அழுது கொண்டே இருந்திருக்கிறது. இது தொடர்பாக குழந்தையை பரிசோதித்த போது குழந்தையின் அந்தரங்க பகுதியில் ரத்த காயங்கள் இருந்திருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் தனது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இவரது புகாரின் அடிப்படையில் விசாரித்த காவல்துறையினர் தீபக் குமாரை கைது செய்த விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்... பிஞ்சு குழந்தையை குழி தோண்டி புதைத்த தந்தை.!!