தமிழகம் இந்தியா

மனைவியின் தங்கை மீது ஆசைப்பட்ட கணவன்! எச்சரிக்கையை மீறியதால் நடந்த விபரீதம்.

Summary:

Young girl suicide in andhra for sister husband torture

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் நாகேந்திரா. இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சொந்த வீடு வைத்திருந்த இவரது வீட்டுக்கு சில வருடங்களுக்கு முன்பு சுதாகர் என்பவர் வாடகைக்கு குடி வந்துள்ளார். இதில் சுதாகருக்கும், நாகேந்திராவின் முதல் மகள் மாதவிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

இவர்களது காதலை என்றுகொண்ட நாகேந்திரா இருவருக்கும் திருமணம் செய்துவைத்துள்ளார். திருமணம் முடிந்து இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுதாகருக்கு தனது மனைவியின் தங்கையும், தனது மச்சினிச்சியுமான மௌனிகா மீது காதல் ஏற்பட்டு அவரை தனக்கு திருமணம் செய்துவைக்குமாறு மனைவியிடம் கேட்டுள்ளார்.

மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர் இந்த விவகாரம் நாகேந்திராவுக்கு தெரிய தனது மருமகனை கூப்பிட்டு கண்டித்துள்ளார். ஆனால், சுதாகர் அதை கேட்பதாக இல்லை. தனது மச்சினிச்சியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு அவருக்கு பல்வேறு டார்ச்சர் கொடுத்துள்ளார்.

இதனால் மனம் உடைந்த மௌனிகா தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சுதாகர் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பெயரில் போலீசார் சுதாகரை கைது செய்து விசாரித்துவருகின்றனர்.


Advertisement