இந்தியா காதல் – உறவுகள்

எனது அம்மாவிற்கு அழகிய மாப்பிளை தேவை!! பக்கா கண்டிஷனுடன் இளம்பெண் செய்துள்ள காரியத்தை பார்த்தீர்களா!!

Summary:

young girl searching groom to mother

இன்றைய காலகட்டத்திலும் பல பகுதிகளில், கணவனை இழந்த இளம்பெண்கள் மற்றும் கணவரை பிரிந்து வாழும் பெண்கள் தனியாகவே வாழும் சூழல் நிலவிவருகிறது. மேலும் அவர்கள் மீதான சமூகத்தின் கண்ணோட்டமும் பெரிதும் வேறுபட்டே காணப்படுகிறது. 

இந்நிலையில் இளம்பெண் ஒருவர் தனது தாய்க்கு திருமணம் செய்ய துணை தேவை என அவரது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளது இணையத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்தவர் அஸ்தா வர்மா 22 வயது நிறைந்த இவர் ஒரு சட்டக்கல்லூரி மாணவி. இவர் தனது தாய்க்கு மாப்பிள்ளை தேடி வருகிறார். 

இந்நிலையில் அவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தான் மற்றும் தனது தாய் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு எனது அம்மாவிற்கு பார்ப்பதற்கு மிகவும் அழகிய 50 வயதுமிக்க மாப்பிள்ளை தேவை. மேலும் அவர் சைவமாக இருக்கவேண்டும் அது மட்டுமின்றி குடிப்பழக்கம் இல்லாதவராகவும், நன்கு வாழ்க்கையில் செட்டிலானவராகவும் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் இளம்பெண்ணின் பக்குவத்தை பாராட்டி வருகின்றனர். மேலும் அவரது பதிவிற்கு பதிலளித்தும் வருகின்றனர்.


Advertisement