இந்தியா

விவசாயிகளுக்காகப் போராடும் 6-ஆம் வகுப்பு மாணவி.! சிறுமி என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?

Summary:

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் 6-ஆம் வகுப்பு மாணவி கலந்துகொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் விவசாயிகளுடன் இணைந்து பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த  6-ஆம் வகுப்பு மாணவி படித்துக்கொண்டே போராடி வருகிறார்.

அவர் ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் சேர்ந்து பஞ்சாபிலிருந்து டெல்லி வரை நடந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார். இதுகுறித்து அந்த மாணவி நான் 6-ஆம் வகுப்பு படிக்கிறேன். படிப்பு முக்கியம் தான், அதேபோல் இந்தப் போராட்டமும் மிக முக்கியம். இந்த புதிய சட்டங்களை தடை செய்த பிறகு தான் நாங்கள் வீடு திரும்புவோம் என கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி  கலந்துகொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறதது. பலரும் அந்த சிறுமியை பாராட்டி வருகின்றனர்.


Advertisement