இந்தியா

இளம்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கணவன் மற்றும் கொழுந்தனார்.! இளம்பெண் போட்ட பக்கா பிளான்!

Summary:

young girl escaped from torture

கடந்த 4ஆம் தேதி, பெங்களூரு அருகே  மஹானாகரா பல்லிகே பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் எனக்கூறி, சுகாதாரத்துறையினர் போலவே இரண்டு பேர் வந்து அந்த பெண்ணை ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்றுள்ளனர். மேலும் அவர்கள் வீட்டில் இருந்தவர்களிடம் தொற்று அதிகமாகிவிட்டது எனவே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவேண்டும் என கூறியுள்ளனர்.

மேலும் அந்த பெண்ணை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்த பெண்ணின் குடும்பத்தாருக்குத் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து அப்பெண்ணின் குடும்பத்தினர் அவர்கள் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு தொடர்புகொண்டு விசாரித்தபோது, அப்படி யாரும் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறியிருக்கின்றனர். இதனையடுத்து அந்த பெண்ணின் கணவனின் சகோதரர், அவரைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்தப்பெண்ணை காணவில்லை என செய்தித்தாளிலும் விளம்பரம் செய்துள்ளனர். இதனையடுத்து தனது புகைப்படத்தை செய்தித்தாளில் பார்த்த அந்த பெண், காவல் ஆய்வாளரை தொடர்புகொண்டு தான் காணாமல் போகவில்லை, வீட்டைவிட்டு வெளியேறுவதற்காக நடத்திய நாடகம். தோழி கொடுத்த ஐடியாவில் ஒரு தனியார் ஆம்புலன்ஸை வாடகைக்கு எடுத்து, இரண்டு நபர்களை இந்த நாடகத்திற்குப் பயன்படுத்தி தான் திட்டமிட்டபடி அவர்களிடம் இருந்து தப்பித்து சென்றுவிட்டேன் என தெரிவித்துள்ளார். தனது கணவனும், அவரது சகோதரரும் தனக்குத் பாலியல் தொந்தரவு கொடுத்து கொடுமை செய்ததால் தான் இந்த முடிவை எடுத்ததாகவும், எனக்கு அங்கு செல்ல விருப்பம் இல்லை எனவும் கூறியிருக்கிறார்.


Advertisement