தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
என்ன பொண்ணுமா நீ...!!! காதலனை கைபிடிக்க இளம்பெண் செய்த மோசமான செயல்.! கதிகலங்கிய போலீசார்.!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள கலாம்னா காவல் நிலையத்தில் நேற்று பகல் 11 மணியளவில், 19-வயது இளம்பெண் ஒருவர் தான் இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பட்டப்பகலில் இப்படி ஒரு பயங்கர சம்பவம் நடந்ததை கேட்ட போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் முதற்கட்டமாக அந்த பெண் கூறிய வாக்குமூலத்தை மையமாக வைத்து எல்லா இடங்களிலும் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆனால் எந்தவொரு சிசிடிவி பதிவிலும் அந்த இளம்பெண் கூறியவாறு எதுவும் நடக்கவில்லை. மேலும், அந்த பெண் கூறியவை அனைத்தும் பொய் என்பது தெரிய வந்தது.
போலீசார் அப்பெண்ணிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர் தன் காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக இவ்வாறு பொய் கூறியதாக உண்மையை ஒப்புக் கொண்டார். தான் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெளியில் தெரிந்தால், தான் விரும்பும் நபருக்கே தன்னை திருமணம் செய்து வைப்பார்கள் என்று எண்ணி இத்தகைய பொய்யான குற்றச்சாட்டை அவர் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.