இந்தியா

அரைநிர்வாணமாக இளம்பெண்ணை அடித்து, ஊர்வலமாக அழைத்துவந்த குடும்பத்தினர்.! வைரலாகும் பதறவைக்கும் ஷாக் வீடியோ!!

Summary:

young girl attacked forl love another caste boy

மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பழங்குடி இளம்பெண் ஒருவர் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். மேலும் அப்பெண் அந்த இளைஞருடன் ஊரை விட்டு ஓட்டம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பெண்ணின் குடும்பத்தார்கள் மற்றும் உறவினர்கள் அவரை தீவிரமாக தேடி கண்டுபிடித்துள்ளனர். பின்னர் இளம்பெண்ணின் சேலையை உருவி, அரை நிர்வாணமாக அடித்து உதைத்து ஊருக்கு ஊர்வலமாக அழைத்து வந்துள்ளனர்.அப்பொழுது அப்பெண் எவ்வளவோ கையெடுத்து கெஞ்சியும் அவர்கள் விடவில்லை.

  Image result for illegal affairs

 இந்நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் கூறுகையில் வாட்ஸ்அப் மூலமே இந்த வீடியோ எங்களுக்கு வந்தது. ஆனால் இதுகுறித்த எந்த புகாரும் இதுவரை வரவில்லை. புகார் வந்த பிறகு நடவடிக்கை எடுக்கபடும் என கூறியுள்ளனர்.

 இவ்வாறு வேறு சமூகத்தை இளைஞரை காதலித்ததால் இளம்பெண்ணை அரை நிர்வாணமாக குடும்பத்தினரே அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement