அம்மா, அப்பா வீட்டில் இல்லை... குடிபோதையில் நண்பர்களுடன் இளம்பெண் செய்த காரியம்!! அட்வைஸ் செய்தவருக்கு நேர்ந்த பரிதாபம்!!

அம்மா, அப்பா வீட்டில் இல்லை... குடிபோதையில் நண்பர்களுடன் இளம்பெண் செய்த காரியம்!! அட்வைஸ் செய்தவருக்கு நேர்ந்த பரிதாபம்!!


young-girl-attack-security

குடிபோதையில் இளம்பெண் நண்பர்களுடன் சேர்ந்து இரும்பு பைப்பால் காவலாளியின்  மண்டையை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி, ஸ்ரீதேவி நகர்பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். 48 வயது நிறைந்த இவர் சேக்காடு பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று காவல்பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்தக் குடியிருப்பில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் இரு இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் தோழியுடன் குடிப்போதையில் தள்ளாடி வந்துள்ளார்.

young girl

இதனைக்கண்ட புருஷோத்தமன் அவர்களுக்கு அறிவுரை கூற முற்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த இளைஞர்கள் புருஷோத்தமனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவரை கடுமையாக தாக்கி, அருகில் இருந்த இரும்பு பைப்பால் புருஷோத்தமன் தலையில் சரமாரியாக அடித்துள்ளனர். இதில் மண்டை உடைந்து அவர் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

இந்த நிலையில் சத்தம் கேட்டு ஓடி வந்த அந்த குடியிருப்பில் வசிக்கும் மக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்த பின் புருஷோத்தமன் நடந்த அனைத்தையும் கூறி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதை தொடர்ந்து அவர்கள் புருஷோத்தமனை தாக்கிய இளம்பெண் லட்சுமி பிரியா, அவரது காதலன் விக்னேஷ் இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.