
young boy killed 9 girls after breaking legs
டெல்லி, குறுகிராம், ஜான்சி, குவாலியர் பகுதிகளில் 3 முதல் 7 வயதுடைய 9 சிறுமிகளை கடத்தி அவர்களின் கால்களை உடைத்து பின்பு பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த 20 வயது கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் 11ஆம் தேதி குருகிராமில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 3 வயது சிறுமியின் உடலை காவல்துறையினர் அங்குள்ள குடிசை பகுதியில் கண்டுபிடித்தனர். அந்த சிறுமியின் கால்கள் செங்கல்லால் அடித்து உடைக்கப்பட்டும் சிறுமியின் மர்ம உறுப்பில் மரக்குச்சி ஒன்று சொருகப்பட்டும், சிறுமியின் முகம் பாலிதீன் பையால் மூடப்பட்டும் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சுனில் குமார் என்ற 20 வயது இளைஞரை காவல்துறையினர் உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சியில் கைது செய்தனர்.
சுனில் குருகிராமில் தங்கியிருந்த தனது அக்காவை சந்திக்க வந்தபோது தான் அதே பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமியை கடத்தி இந்த கொடூரத்தை செய்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அந்த கொடூரனை காவலில் எடுத்து போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சிறுமியை போன்றே கடந்த இரண்டு வருடங்களில் மூன்று முதல் ஏழு வயதிற்கு இடைப்பட்ட ஒன்பது சிறுமிகளை கடத்தி அவர்களது கால்களை உடைத்து கற்பழித்து கொலை செய்ததாக சுனில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.
டெல்லியைச் சேர்ந்த 4 சிறுமிகளும் குறுகிறாமை சேர்ந்த 3, ஜான்சி மற்றும் குவாலியோரில் தல ஒரு சிறுமிகள் என மொத்தம் ஒன்பது சிறுமிகள் இந்த கொடூரனால் கால்கள் குறிக்கப்பட்டு கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். எந்த வேலையும் இன்றி பொது வெளியில் சுற்றித் திரியும் இந்த இளைஞன் சிறுமிகளுக்கு இனிப்புகளை வாங்கி கொடுப்பது போல் ஆசைவார்த்தை காட்டி அவர்களை கடத்திச் சென்று இந்த கொடுமைகளை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
"அவனுக்கு தேதி சுவையான உணவு மற்றும் தனது ஆசையை தீர்த்துக்கொள்ள இளம்பெண்கள் மட்டுமே" என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளான். போலீசாரின் காவலில் உள்ள சுனில்குமாரை மேலும் ஏதேனும் தகவல் சிக்குமா என விசாரித்து வருகின்றனர் காவல்துறையினர்.
Advertisement
Advertisement