
Yeli poochi found in puthuchery fisher man net
புதுச்சேரியை சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையில் எலி பூச்சி என்று அழைக்கப்படும் அரியவகை கடல் உயிரினம் ஓன்று சிக்கியுள்ளது. புதுச்சேரி மூர்த்தி குப்பம் பகுதியை சேர்ந்தவர் மீனவர் கலைஞானம். இவர் தனது சக மீனவர்களுடன் மீன் பிடிப்பதற்காக படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் சென்றுள்ளார்.
மீன் பிடித்துவிட்டு கரை திரும்பியதும் வலையில் இருக்கும் மீன்களை வெளியே எடுக்கும்போது நண்டு போன்று வித்தியாசமான தோற்றம் கொண்ட உயிரினம் ஓன்று வலையில் சிக்கியிருப்பதை பார்த்துள்ளார்.
இதனை அடுத்து அந்த உயிரினம் அரியவகை எலி பூச்சி என்றும், வழக்கமான எலி பூச்சி 10 முதல் 50 கிராம் எடை மட்டுமே இருக்கும். ஆனால் கலைஞானம் வலையில் சிக்கிய எலி பூச்சியின் எடை சுமார் ஒரு கிலோ இருந்துள்ளது.
மிகவும் மருத்துவ குணம் கொண்ட இந்த வகை உயிரினத்தை ஏலம் விட்டால் சுமார் 5 ஆயிரம் வரை போகும் என்றும், ஆனால், இந்த உயிரினத்தின் அபூர்வ மருத்துவ குணத்தால் அதனை தனது குடும்பத்துடன் சேர்ந்து சமைத்து சாப்பிட்டுவிட்டதாகவும் கலைஞானம் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement