வேகமாக வந்த கான்க்ரீட் கலவை லாரி..! தடுத்து சோதனை செய்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!



workers-escaping-using-concrete-lorry-police-arrested

கொரோனா ஊரடங்கு உத்தரவால் வெளிமாநிலங்களில் மாட்டிக்கொண்ட சிலர் கலவை கலக்கும் கான்க்ரீட் இயந்திரத்தின் உள்ளே பதுங்கி சொந்த ஊருக்கு செல்ல முயற்சித்தபோது போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

நாடு முழுவதும் வேமகம பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் வேலை பார்த்துவந்த தொழிலார்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர். சிலர் நடைபயணமாக சொந்த ஊருக்கு திரும்பும் சம்பவங்களும் நடந்துவருகிறது.

corono

இந்நிலையில், மஹாராஷ்டிராவில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு செல்லும் சாலை வழியாக வந்த கான்க்ரீட் கலவை லாரி ஒன்றை போலீசார் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, கலவை கலக்கும் இயந்திரம் உள்ளே 18 பேர் பதுங்கி இருப்பதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணையில் அனைவரும் மஹாராஷ்டிராவில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 18 பேரையும் தனிமைப்படுத்தியுள்ள அதிகாரிகள், லாரி ஓட்டுனரை கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளன்னர்.