"அந்த மாதிரி படத்தில் நடித்த பிறகு வீட்டிற்கு சென்று நீண்ட நேரம் அழுதேன்" மனம் திறந்த சதா.!
வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு.! நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.! ஆட்டோவில் சிகிச்சை பெறும் பெண்.!
வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு.! நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.! ஆட்டோவில் சிகிச்சை பெறும் பெண்.!

இந்தியாவில் கொரோனா சமீப காலமாக குறைந்து வந்த நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கர்நாடக மாநிலத்திலும் கொரோனா 2-வது அலை உருவாகி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால், அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் 55 வயது நிரம்பிய பெண் ஒருவருக்கு சளி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அந்த மருத்துவமனையில், படுக்கை இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு மருத்துவமனை முன்பு ஒரு ஆட்டோவில் வைத்து ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் செயற்கை சுவாச கருவி பொருத்திய நிலையில் குடும்பத்தினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.