ஜன்னலை திறந்து வைத்து கசமுசா.. அந்த சத்தம் கேட்டதால் போலீசில் புகார்!Women case against sex sound in banglore

பெங்களூர் அருகே ஜன்னலை திறந்து வைத்து கசமுசா செய்ததால், அசிங்கமான சத்தம் கேட்பதாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தற்போதைய காலகட்டத்தில் எதிர் வீடு, பக்கத்து வீடு சண்டைகள் இல்லாத வீடுகளை கிடையாது என கூறலாம். அதன்படி, ஆடு, மாடு, கோழி போன்றவை வேலி தாண்டுவது தொடங்கி, மர கிளைகள் பக்கத்து வீட்டில் இடிப்பது வரை காரணங்களாக காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகிறது.

bangalore

அந்த வகையில் பெங்களூருவில் வித்தியாசமான புகார் ஒன்று வந்துள்ளது. அதன்படி பெங்களூர் கிரி நகரில் பெண்மணி ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், எனது வீட்டின் வாசல் பக்கமாக முன்னாள் வீட்டின் படுக்கையறை ஜன்னல் பகுதி உள்ளது.

இந்த நிலையில் அங்கே வசித்து வரும் இளம் தம்பதிகள் தினமும் ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டு உடலுறவு வைத்துள்ளனர். இதனால் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது முனகல் சத்தம் கேட்டதால், எரிச்சலடைந்த அந்தப் பெண் ஜன்னலை மூடி வைத்துக் கொண்டு இதையெல்லாம் செய்யுங்கள் என கூறியுள்ளார்.

bangalore

ஆனாலும், அந்த இளம் தம்பதியினர் கேட்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் அந்தப் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.