என்னதான் இருந்தாலும் இப்படியா..! பெத்த பிள்ளைகளின் கழுத்தை கரகரவென அறுத்த தாய்..! பதறவைக்கும் சம்பவம்..



Woman tries to kill children end life near Andhra

கணவன் மனைவி இடையே நடந்த சண்டையில் மனைவி தனது இரண்டு பிள்ளைகளின் கழுத்தை கத்தியால் அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம், வீ.கோட்டா அடுத்த அட்றபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆனந்த்(38) - மீனாட்சி(34) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துமுடிந்த நிலையில் தற்போது மனோஜ்(7) மற்றும் மதுவிகா(5) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தனது மனைவி மீனாட்சியின் நடத்தை மீது அவரது கணவன் ஆனந்துக்கு சமீபகாலமாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் கணவன் மனைவி இடையே நேற்று முன்தினம் மீண்டும் சண்டை ஏற்பட, மனைவியை தாக்கிவிட்டு ஆனந்தன் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த மீனாட்சி, தனது மகன் மற்றும் மகளை கழுத்தில் கத்தியால் அறுத்துவிட்டு தானும் கழுத்தை அறுத்துக்கொண்ட தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மூவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தற்போது அவர்கள் மூவருக்கும் சிகிச்சை நடைபெற்றுவரும்நிலையில், மீனாட்சியின் கணவர் ஆனந்த் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.