இந்தியா

ஓடும் ரயிலில் கழிவறை சென்றுவிட்டு வருவதாக கூறிய இளம் பெண்! கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

Summary:

Woman missing from moving train kidnap suspected

ஓடும் ரயிலில் AC அறையில் கழிவறை சென்றுவிட்டு வருவதாக கூறிய இளம் பெண் ரயிலில் இருந்து மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் நோக்கி பயணம் செய்த ரயிலில் ராஜு ராய் அவரது மனைவி நீலிமா அவர்களது 5 வயது மகன் மற்றும் நீலிமாவின் சகோதரர் நான்கு பேரும் பயணம் செய்துள்னனர்.

இந்நிலையில் கழிவறை சென்றுவிட்டு வருவதாக கூறிய நீலிமா நீண்ட நேரமாகியும் இருக்கைக்கு திரும்பாததால் கவர் ராஜு மற்றும் சகோதரர் இருவரும் கழிவறை சென்று பார்த்தபோது அங்கு நீலிமா இல்லை. இதனால் ரயில் முழுவதும் தேடியும் அவர் எங்கும் இல்லை.

உடனடியாக அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கிய ராஜு இதுகுறித்து ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்துள்ள புகாரில், தனது மனைவியின் கைப்பை மற்றும் தொலைபேசி இருக்கைலையே உள்ளது, நாங்கள் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பியதால் எனது மனைவி அதிமான நகைகள் அணிந்திருந்தார். இதனால் கொள்ளையர்கள் எனது மனைவியை கடத்தியிருக்க வாய்ப்பு இருப்பதாக ராஜு கூறியுள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ஓடும் ரயிலில் இருந்து 23 வயது இளம் பெண் மாயமான சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement