இளம் பெண்ணுடன் தொடர்பில் இருந்த கணவன்.. சரி வாழ்ந்துட்டுப்போங்க.. ஆனால்.? மனைவி போட்ட பக்கா கண்டிஷன்..

இளம் பெண்ணுடன் தொடர்பில் இருந்த கணவன்.. சரி வாழ்ந்துட்டுப்போங்க.. ஆனால்.? மனைவி போட்ட பக்கா கண்டிஷன்..


Woman Lets Husband Marry His Lover in Exchange for Rs 1.5 Crore

வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த தனது கணவனை விவாகரத்து செய்வதற்காக மனைவி தனது கணவனிடம் விதித்த நிபந்தனை தற்போது வைரலாக பேசப்பட்டுவருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்த திருமணம் முடிந்த நபர் ஒருவர் தனது அலுவலகத்தில் பணிபுரியும் சக பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்துவந்துள்ளார். இந்த தகவல் அவரது மனைவிக்கு தெரியவர இருவருக்கும் இதுகுறித்து அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்களின் மகள்களில் ஒருவர் இதுகுறித்து தனது தந்தை மீது நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தனது தந்தையின் செயலால் தினமும் வீட்டில் பிரச்சனை வருவதாகவும், தானாலும், தனது சகோதரியாலும் படிப்பில் கவனம் செலுத்தமுடியவில்லை, இதற்கு ஒரு தீர்வு வேண்டும் என அவர் கேட்டுள்ளார். இதனை அடுத்து கணவன் மனைவி இருவருக்கும் கவுன்சிலிங் நடத்தப்பட்டுள்ளது.

ஆனால் தன்னால் தனது மனைவியுடன் வாழ முடியாது எனவும், தனது காதலியுடன்தான் வாழவேண்டும் என அந்த நபர் பிடிவாதமாக இருந்துள்ளார். அதேபோல் தன்னால் தனது கணவருக்கு விவாகரத்து தர முடியாது என அவரது மனைவியும் பிடிவாதமாக இருந்துள்ளார்.

இப்படியே பல்வேறு கவுன்சிலிங் தொடர்ந்து நடத்தப்பட்டுவந்தநிலையில் இறுதியாக அந்த பெண் எடுத்த முடிவு வியப்பை ஏற்படுத்தியுள்ளது, அதவாது அவர் தனது கணவனை விவாகரத்து செய்ய ஒத்துக்கொள்வதாகவும், ஆனால் அதற்கு ஈடாக தனது கணவர் விரும்பும் பெண்ணின் அபார்ட்மெண்ட் மற்றும் சுமார் 27 லட்ச ரூபாயை அவர்கள் தர சம்மதித்தால் தான் பிரிந்து செல்லம் சம்மதம் என தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய 1.5 கோடி ரூபாய் சொத்துக்கு ஈடாக தனது கணவரை தான் அந்த பெண்ணிற்கு விட்டுத்தர சம்மதிப்பதாக அவர் கூறியுள்ளார். தனது பெண் குழந்தைகள் இருவரின் வருங்காலத்தையும் கருத்தில் கொண்டு தான் அப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.