அம்மாடியோ... இப்படி எல்லாம் செய்வார்களா.? சுருண்டு விழுந்த தாய் மற்றும் மகள்.! கணவருக்கு தொடர்பா.?

அம்மாடியோ... இப்படி எல்லாம் செய்வார்களா.? சுருண்டு விழுந்த தாய் மற்றும் மகள்.! கணவருக்கு தொடர்பா.?


woman-and-her-mother-was-shot-dead-by-unidentified-men

பஞ்சாப் மாநிலத்தில் மர்ம நபர்களால் இரண்டு பெண்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் கவுர். இவரது மகள் குர்ப்ரீத் கவுர். 32 வயதான இவருக்கும் ஜல்பிந்தர் சிங் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஜல்பிந்தர் சிங் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கணவன் மற்றும் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக குர்ப்ரீத் கவுர் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார்.

Indiaஇந்நிலையில் குர்ப்ரீத் கவுர் மற்றும் அவரது தாயார் ரஞ்சித் கவுர் இருவரும் வீட்டில் இருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் தாய் மற்றும் மகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

Indiaசம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது மனைவியையும், மாமியாரையும் கொலை செய்வதற்கென்றே அவர்கள் வீட்டில் ஒரு ஆளை பணியமர்த்தியதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.